கொல்கத்தா வந்தடைந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி

#India #football #Argentina #Kolkatta
Prasu
2 days ago
கொல்கத்தா வந்தடைந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா வந்து சேர்ந்துள்ளார். மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். 

மேலும் அவரது இந்திய சுற்றுப்பயணத்திற்கு ‘GOAT India Tour 2025’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் வருகைக்காக பல வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அவரது 70 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புது தில்லியில் பல சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில், மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ​​100 ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான தி கோட் இந்தியா டூர்(The GOAT India Tour), மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.9.95 லட்சம் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!