17 வகையான முக்கியமான மருந்து பொருட்களுடன் இலங்கை வந்த இந்திய விமானம்!
#India
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
17 வகையான முக்கியமான மருந்துகள் மற்றும் நாட்டின் சுகாதார சேவைகளைத் தக்கவைக்கத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் உட்பட 25 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்களுடன் இந்திய விமானம் ஒன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
குறித்த விமானம் நேற்று பிற்பகல் 3:07 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் நிவாரணப் பொருட்களை இறக்கிய பிறகு, மஹியங்கனையில் ஒரு கள மருத்துவமனையை இயக்கிய 85 பணியாளர்கள் குறித்த விமானத்தில் ஏறி இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அவர்களை வழியனுப்ப சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.
இந்திய மருத்துவர்கள் உட்பட மருத்துவமனைக் குழு 7,000 நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை உட்பட மருத்துவ சிகிச்சையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
