T-56 துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது - பல குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக அறிவிப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago
T-56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் அம்பாறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த துணைப் பொலிஸ் மா அதிபர் (DIG) வருண ஜெயசுந்தரவுக்குக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் சாடமுல்ல, நாமல் உயன பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவின் நெருங்கிய கூட்டாளி என்றும், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பல திட்டமிட்ட கொலைகளுக்குப் பயன்படுத்தப்படவிருந்ததாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து படபொல பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
