இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 week ago
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (15) மாலையில் அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2017–2018 ஆண்டுகளுக்கான எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த மூன்று நீண்டகால டெண்டர்களை ரத்து செய்து, அதற்கு பதிலாக அதிக விலைக்கு ஸ்பாட் டெண்டர்களை மேற்கொண்டதன் மூலம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கிட்டத்தட்ட 800 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
