2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சி!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
13 hours ago
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.4 சதவீதம் விரிவடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை (DCS) தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, மூன்றாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவான 3,154,148 மில்லியனில் இருந்து 3,325,611 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
விவசாயம், தொழில்துறை மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் அனைத்தும் முறையே 3.6 சதவீதம், 8.1 சதவீதம் மற்றும் 3.5 சதவீதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
