தமிழக தலைவர்களை சந்திக்க இந்தியா பயணமாகும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!

#SriLanka
Mayoorikka
5 hours ago
தமிழக தலைவர்களை சந்திக்க இந்தியா பயணமாகும் தமிழ்த்தேசிய  மக்கள் முன்னணி!

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சிறீலங்கா அரசு ஏக்கியிராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிள்ளது.

 இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். 

அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டிய அவசரதேவை எழுந்துள்ளது. இந்நோக்கத்திற்காக தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து இவ்விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களது ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சென்னை சென்று அரசியல் தலைவர்களுடன் இவ்வாரம் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP பொ ஜங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் செ.கஜேந்திரன் செயலாளர் த.தே.ம.மு த.சுரேஸ் தேசிய அமைப்பாளர் க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி) உத்தியோகபூர்வ பேச்சாளர் ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!