அரச தொழில்முயற்சி திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிக்க அங்கீகாரம்!
#SriLanka
Mayoorikka
2 hours ago
அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய பி.ஏ.எஸ் அதுள குமார 2025.12.03 ஆம் திகதி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமையால், குறித்த பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளது.
அதற்கமைய பதவி வெற்றிடமாகவுள்ள அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றுகின்ற இலங்கை கணக்கீட்டு சேவை விசேடதர அதிகாரியான பி.ஏ.ரீ. றொட்ரிகோ உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
