அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இந்தியரா?
அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரில் ஒருவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சஜித் அக்ரம், தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த சஜித் அக்ரம், அதற்குப் பிறகு ஆறு முறை மட்டுமே இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தினருடன் அவர் குறைந்த தொடர்பே வைத்திருந்ததாகவும், அவரது தீவிர செயற்பாடுகள் குறித்து குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய இருவர் 50 வயதான சஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் தந்தையும் மகனும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சஜித் அக்ரமுக்கு இந்தியாவில் எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும், அவரது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா அல்லது தெலுங்கானாவுடன் தொடர்பு இல்லை என்றும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )