இன்றைய ராசிபலன் (18.12.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
19 hours ago
இன்றைய ராசிபலன் (18.12.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் வேலையில் தடை ஏற்படும். எதிர் பார்த்த வரவு இழுபறியாகும். பரணி: சந்திராஷ்டமம் என்பதால் வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வாகனத்தை இயக்கும் போதும் இயந்திரப் பணியிலும் நிதானம் தேவை. கார்த்திகை 1: வேலை பளு அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சனை தேடிவரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது அவசியம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நிம்மதியான நாள். உங்கள் செயல்களில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக ஒருசில மாற்றம் உண்டாகும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். ரோகிணி: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மிருகசீரிடம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலரின் ஆலோசனை நன்மை தரும். வருமானம் திருப்தி தரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகமாக செயல்படுவீர். முயற்சி லாபமாகும். திருவாதிரை: தடைபட்ட வருவாய் வரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். தொழில் கூட்டாளியுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

கடகம்

புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூசம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். குழந்தைகளுக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். நட்புகளால் வேலை நடக்கும். ஆயில்யம்: திட்டமிட்ட வேலை தடையின்றி நடக்கும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் சங்கடம் தோன்றும். மனம் குழப்பம் அடையும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். பூரம்: முயற்சியால் சிக்கல் அனைத்தையும் சரி செய்வீர். செலவு செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும். உத்திரம் 1: வேலை பளுவால் சங்கடத்திற்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் தடைகளும் தாமதமும் ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு வேலையை முடித்து லாபம் காண்பீர். செல்வாக்கு உயரும். அஸ்தம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வியாபாரத்தில் அணுகுமுறை வெற்றியாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சித்திரை 1,2: தடைபட்ட வேலை நடக்கும். புதிய முயற்சியில் லாபம் காண்பீர். திறமை வெளிப்படும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.

துலாம்

சித்திரை 3,4: நிதானமாக செயல்பட்டு நன்மை அடைய வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வரவு செலவில் கவனம் தேவை. சுவாதி: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். விசாகம் 1,2,3: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் பிரச்னை உண்டாகும். கோபத்தை வெளிக்காட்டாமல் அமைதி காப்பது நன்மையாகும். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். மனதில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தினர் ஆதரவால் நினைத்ததை சாதிப்பீர்.

தனுசு

மூலம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். வரவு செலவில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். பூராடம்: காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும். வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக சரி பார்க்கவும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். உத்திராடம் 1: எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். திட்டமிட்ட வேலை இழுபறியாகும். மனம் குழப்பமடையும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நவீன பொருட்கள் வாங்குவீர். திருவோணம்: நேற்றைய நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். செயல் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். அவிட்டம் 1,2: நண்பர்கள் ஆதரவால் உங்களுக்கு இருந்த பிரச்னை விலகும். பண வரவு அதிகரிக்கும். தாராளமாக செலவு செய்வீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: லாபமான நாள். முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனக்குழப்பம் விலகும். சதயம்: இழுபறியான விவகாரம் முடியும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்ட வேலை நடக்கும்.பணவரவில் ஏற்பட்ட தடை விலகும்.

மீனம்

பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு முயற்சியை வெற்றியாக்கும். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நண்பர்கள் வழியே உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலை நடக்கும் ம். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். மனதில் தோன்றிய குழப்பம் விலகும். பெரிய முயற்சி வெற்றியாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!