டித்வா சூறாவளி - நாடாளுமன்ற தேர்வுக்குழுவை நிறுவ எதிர்கட்சிகள் வலியுறுத்தல்!
டித்வா சூறாவளியால் ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கான தயார்நிலை இல்லாமை குறித்து விரிவான மறுஆய்வு நடத்துவதற்காக நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை நிறுவுவதற்கான திட்டம் நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 25 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த முன்மொழிவில் கையெழுத்திட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களைக் குறைக்கத் தவறியதாகக் கூறப்படுவது, பேரழிவுக்கு முன்னதாக செயல்படுத்தப்பட்ட தயார்நிலை நடவடிக்கைகளின் செயல்திறன் ஆகியவற்றை ஆராய ஒரு தேர்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக விவரிக்கப்படும் தித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிர் இழப்பு, சொத்துக்களுக்கு சேதம் மற்றும் பொதுமக்களுக்கு ஒட்டுமொத்த பாதிப்பு ஆகியவை இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை என்று சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் எம்.பி.க்கள் குறிப்பிட்டனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
