பிரான்சில் 2.2 கோடி தனிநபர் தரவுகள் திருட்டா?குடும்ப நல அமைப்பு மீது சைபர் தாக்குதல்!

#France #world_news
Mayoorikka
2 hours ago
பிரான்சில்   2.2 கோடி தனிநபர் தரவுகள் திருட்டா?குடும்ப நல அமைப்பு  மீது சைபர் தாக்குதல்!

பிரான்சின் குடும்ப நல அமைப்பான (CAF) மீது நடத்தப்பட்ட மாபெரும் சைபர் தாக்குதலில், சுமார் 2 கோடியே 20 லட்சம் (22 மில்லியன்) வரிகள் கொண்ட தனிநபர் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நடந்தது என்ன? 

டிசம்பர் 17 மற்றும் 18, 2025 இரவில், குற்றவாளிகள் பயன்படுத்தும் இணையதளம் ஒன்றில் (CAF) தரவுகள் அடங்கிய மிகப் பெரிய கோப்பு ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. 'லெ நியூமெரிக்' (Les Numériques) வெளியிட்ட தகவலின்படி, இதில் பயனாளர்களின் பெயர்கள், முகவரிகள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 பழிவாங்கும் படலம்? 

இந்தத் தாக்குதலை நடத்திய ஹேக்கர்கள் (Hackers), இது பிரெஞ்சு அரசிற்கு எதிரான ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளனர். கடந்த ஜூன் 2025-இல் இவர்களது நெட்வொர்க்கைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பதிலடியாகவே இது செய்யப்பட்டதாம்.

 சில நாட்களுக்கு முன்புதான் உள்துறை அமைச்சகத்தின் (Ministère de l’Intérieur) 1 கோடியே 64 லட்சம் குடிமக்களின் தரவுகள் திருடப்பட்டன. தற்போது வரித்துறை (DGFIP) மற்றும் ஓய்வூதிய காப்பீட்டு அமைப்பு (CNAV) ஆகியவற்றின் தரவுகளையும் கைப்பற்றியுள்ளதாகக் கூறி இவர்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளனர்.

 இதற்கிடையில், இந்த விசாரணை தொடர்பாக லிமோஜ் (Limoges) நகரில் 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (CAF) சொல்வது என்ன? மறுபுறம், (CAF) நிர்வாகம் இதனை முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. "தற்போதைய விசாரணையில் எங்கள் கணினிகளில் நேரடியான ஊடுருவல் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

எனவே, பரவும் தகவல்களை மக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்," என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். எத்தனை பேர் பாதிப்பு? சுமார் 15 ஜிபி (GB) அளவுள்ள இந்தக் கோப்பு நவம்பர் 2025-இல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 22 மில்லியன் வரிகள் இருந்தாலும், ஒரே நபரின் பெயர் பலமுறை வந்திருக்கலாம். 'லா வுவா டு நோர்' (La Voix du Nord) நாளிதழின் கணிப்புப்படி, நகல்களை நீக்கிய பிறகு சுமார் 80 லட்சம் பிரெஞ்சு மக்கள் (சுமார் 35 முதல் 40 லட்சம் குடும்பங்கள்) இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

- சிவா சின்னப்பொடி-

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!