பயங்கரவாதம் குறித்து எத்தியோப்பியாவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
அரச முறை பயணமாக எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.
இதன்போது, சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது அற்புதமாக இருக்கிறது. நான் இங்கு என் சொந்த ஊரில் இருப்பது போல் உணர்கிறேன்.
இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பில் நான் நட்பு, நல்லெண்ணம் மற்றும் சகோதரத்துவ வாழ்த்துக்களைக் கொண்டு வந்து உள்ளேன். எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
இந்தியாவும் எத்தியோப்பியாவும் தட்பவெப்ப நிலையிலும் உணர்விலும் ஒருமித்த அன்பைப் பகிர்ந்து கொள்கின்றன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையர்கள் பரந்த கடல்களுக்கு அப்பால் தொடர்புகளை உருவாக்கினார்கள்.
1941ம் ஆண்டில் எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் எத்தியோப்பியர்களுடன் இணைந்து போரிட்டனர்.
மேலும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் எத்தியோப்பியா நாட்டிற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )