வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும், வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களமும் இணைந்து, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்த வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஊடாக உணவு உற்பத்தி, விவசாயம், சிறுகைத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் ஈடுபடும் 80 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முழு மானிய அடிப்படையில் தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, தொழிற்துறை திணைக்களத்தின் ஊடாக 37 பெண் தொழில்முனைவோருக்கு அரை மானிய அடிப்படையில் தொழில் உபகரணங்கள் மற்றும் ஆதரவுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிவகரன், சாவகச்சேரி பிரதேச செயலர் எஸ்.சத்தியசோதி, தொழிற்துறை திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி க.துஷ்பயா, வடக்கு மாகாண பிரதம செயலக உதவிச் செயலர் திருமதி அனெற் நிந்துஸா அன்ரனி டினேஸ், எனது இணைப்பாளர் சு.கபிலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பெண்களின் பொருளாதார சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் இந்த முயற்சி, சமூக வளர்ச்சிக்கான முக்கியமான அடியெடுப்பாக அமைகிறது.




(வீடியோ இங்கே )