தையிட்டியில் உள்ள விகாரையை உடைப்பதற்கு முன் நல்லூர் கோவிலை உடையுங்கள்! அர்ச்சுனா
தையிட்டி விகாரையை உடைப்பதற்கு முன் முதலில் நல்லூர் கோயிலை தான் இடிக்க வேண்டும் எனவும் நல்லூர் கோவில் கருவறைக்குள் முஸ்லிம் நபர் ஒருவர் சமாதி இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
பலாலி பொலிஸ் நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில் "முன்னதாக நல்லூர் ஆலயம் கிட்டு பூங்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் அமைந்திருந்தது.
தற்போது ஒல்லாந்தர் கோட்டை அமைக்கப்பெற்றது நல்லூர் ஆலயத்தின் கற்களை கொண்டே, அவ்வாறென்றால் முதலில் அந்த கோட்டையை உடைக்க வேண்டும். பின்னர், கத்தோலிக்க தேவாலயத்தை உடைக்க வேண்டும்.
அதன் பின்னரே தையிட்டி பற்றி கதைக்க வேண்டும். யாரோ கூறிய கட்டளைக்கிணங்க இந்த போராட்டம் இடம்பெருகிறது.
இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய எவரும் முன்வரவில்லை. இவர்கள் வாக்குகளுக்காக இவ்வாறு செய்கின்றனர் என கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
