அனர்த்தத்திற்கு பின்னர் திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் வெளியீடு!

#SriLanka #budget #Disaster
Mayoorikka
5 hours ago
அனர்த்தத்திற்கு பின்னர்  திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் வெளியீடு!

அனர்த்த நிவாரணங்களுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

 'டித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்மொழியப்பட்ட நிவாரணங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய புதிய சுற்றுநிருபம் ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

 கடந்த டிசம்பர் 05 ஆம் திகதி வெளியிட்ட வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இனால் முன்மொழியப்பட்ட நிவாரணத் திட்டத்தை, மேலும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக புதிய உட்சேர்ப்புகள், தெளிவுபடுத்தல்கள் மற்றும் திருத்தங்களை உள்ளடக்கி இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

 அதற்கமைய, வரவு செலவுத்திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025 இல் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் 3, 5, 6, 7, 9, 11, 12 மற்றும் 14 ஆகிய விடயங்கள் திருத்தப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!