கொஹுவல சந்தியில் முச்சக்கர வண்டியை குறிவைத்து துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம்!
கொஹுவல சந்தியில் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொஹுவல சந்திக்கும் நுகேகொட சந்திக்கும் இடையில் நேற்று மாலை (22) இரவு 8.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகவும், தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் உடனடியாக சிகிச்சைக்காக களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர் களுபோவில பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொஹுவல பொலிஸாரும் கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
