யாழில் மீண்டும் சட்ட விரோத கட்டடங்கள் வெடித்த போராட்டம் (வீடியோ இணைப்பு)

#SriLanka #Jaffna #Protest
Mayoorikka
3 hours ago
யாழில் மீண்டும் சட்ட விரோத கட்டடங்கள் வெடித்த போராட்டம்  (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம் தொடர்பில் இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 அத்துடன் குறித்த கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகம் சட்டவிரோதமானது எனவும் ,இது அத்தீவின் சூழலியல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

 இத்திட்டம் அமையவுள்ள பகுதியில் கண்டல் தாவரங்கள், கடல் புற்கள், உப்பளங்கள் மற்றும் மண்டைதீவு வனச்சரகம் போன்ற முக்கியமான சூழலியல் மண்டலங்கள் இருப்பதாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


 மேலும் அந்தக் கடிதத்தில், “கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ சட்டத்தின் கீழ் தேவையான எவ்வித சட்டபூர்வ அனுமதிகளையும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) பெறவில்லை என அந்தச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

 மண்டைதீவு ஒரு இயற்கை வெள்ளத் தடுப்பு வலயமாகும். மழைக்காலங்களில் இப்பகுதி நீரில் மூழ்கும் வாய்ப்புள்ளதால், இங்கு பாரிய கட்டுமானங்களை மேற்கொள்வது நிதி விரயத்திற்கும் தொடர்ச்சியான பராமரிப்பு செலவுகளுக்கும் வழிவகுக்கும்.

 அதிகாரிகளுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள குறித்த சங்கம், இது இலங்கையின் நிலையான அபிவிருத்திக் கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!