கொழும்பு நகராட்சி மன்ற பட்ஜெட் தோல்விக்கு காரணம் என்ன?
கொழும்பு நகராட்சி மன்ற (CMC) மேயர் வ்ரே காலி பால்தசார், பட்ஜெட் இரண்டாவது வாசிப்புக்கு செல்லும் என்றும், தேவைப்பட்டால் திருத்தங்கள் முன்மொழியப்படலாம் என்றும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், இரண்டு வாரங்களுக்குள் பட்ஜெட் நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கவுன்சிலின் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்கள் உட்பட விரிவான ஆலோசனை மற்றும் பங்கேற்பு செயல்முறை மூலம் பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், முதல் வாசிப்பை நிறைவேற்ற தேவையான எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற திட்டங்கள் தவறிவிட்டன எனக் கூறிய அவர், அரசியல் நோக்கங்களே தோல்விக்கு காரணம் எனவும் கூறினார்.
தனது நிர்வாகத்தின் முன்னுரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், தடையற்ற சேவை வழங்கல் மற்றும் கொழும்பின் குடியிருப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
