அர்ச்சுனாவை எதிர்த்து யாழ் பெண்கள் போராட்டம்
#Jaffna
#Protest
#Women
#Archuna
Prasu
1 hour ago
மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பெண்கள் மீது அர்ச்சுனா எம்.பி பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் அவரது உடல் மொழி ஆகியவை பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் அரசியலுக்கு வந்த பெண்பிரதிநிதிகள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே தங்களை அவமரியாதை செய்வதை ஏற்க முடியாது என ஆவேசமடைந்துள்ளனர்.
மக்கள் சேவையில் ஈடுபடும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இத்தகைய அநாகரீகமான செயல்கள் தொடர்பாக உரிய தரப்பினரிடம் புகார் அளிப்பதற்கும், நாடாளுமன்ற ஒழுக்கக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் பல்வேறு மகளிர்அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன
(வீடியோ இங்கே )