கிராண்ட்பாஸ் பகுதியில் T-56 துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கண்டுப்பிடிப்பு!
கிராண்ட்பாஸ், 60-வத்த பகுதியில் உள்ள ஒரு காணியில் இருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கியை அந்த இடத்திற்கு கொண்டு வந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு 14 ஐச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, பிலியந்தலையில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துப்பாக்கி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
