திருகோணமலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து விபத்து! 12 பேர் படுகாயம்

#SriLanka #Trincomalee #Accident
Mayoorikka
3 hours ago
திருகோணமலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பேருந்து விபத்து! 12 பேர் படுகாயம்

திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று (25) காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். ​

அக்கரைப்பற்றிலிருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருகோணமலை நோக்கிப் பயணித்த குறித்த சொகுசு பேருந்து, இன்று காலை 7:00 மணியளவில் மஹிந்தபுர சந்திக்கு அருகில் சென்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

 பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 விபத்தில் காயமடைந்த 9 பேர் மூதூர் தள வைத்தியசாலையிலும் 3 பேர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவருக்கும் பாரிய உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!