நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

#Ukraine #Zelensky #President #christmas
Prasu
2 hours ago
நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மறைமுகமாக ரஷிய அதிபர் புதின் அழியட்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில், ரஷியா ஏற்படுத்திய அனைத்து துன்பங்களுக்கும் மத்தியிலும், மிகவும் முக்கியமானவற்றை ஆக்கிரமிக்கவோ அல்லது குண்டுவீசி அழிக்கவோ அதனால் முடியாது.

இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் எங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு ஆசைதான் உள்ளது. அவன் (புதின் பெயரை குறிப்பிடாமல்) அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆனால் நாம் கடவுளை நோக்கித் திரும்பும்போது, நிச்சயமாக, நாம் இன்னும் பெரிய ஒன்றைக் கேட்கிறோம். நாங்கள் உக்ரைனுக்காக அமைதியைக் கேட்கிறோம். 

அதற்காக நாங்கள் போராடுகிறோம், அதற்காகப் பிரார்த்திக்கிறோம், அது எங்களுக்கு உரித்தானது என்று ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!