நைஜீரியாவில் மசூதியில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழப்பு
#Death
#BombBlast
#Mosque
#Nigeria
Prasu
1 hour ago
நைஜீரியா நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் மைதுகுரி பகுதியில் கேம்போரு சந்தை பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது திடீரென தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை.
(வீடியோ இங்கே )