அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் உக்ரனின் ஜெலன்ஸ்கி
#America
#Ukraine
#Zelensky
#President
#Trump
Prasu
3 hours ago
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 20 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார்.
இதை ஏற்றுக் கொள்வது தொடர்பாக உக்ரைன்- அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புளோரிடாவில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, உக்ரைன் பாதுகாப்பை உத்தரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )