நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் டக்ளஸ் தேவானந்தா!
#SriLanka
#Douglas Devananda
#Court
Thamilini
5 hours ago
குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தேவாநந்தாவிடம் இருந்த துப்பாக்கி ஒரு திட்டமிட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களின் கைகளில் சிக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக நேற்று (26) மதியம் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு அமைச்சராக பணியாற்றிய தேவானந்தாவுக்கு இலங்கை இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான ‘மாகந்துரே மதுஷ்’ என்பவரிடம் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாகவே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
