கொழும்பில் ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவர் கைது!
#SriLanka
#Colombo
#Arrest
#Heroin
Thamilini
3 hours ago
பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து 490 கிராம் 300 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் தெமட்டகொடையைச் சேர்ந்த 65 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.