அமெரிக்காவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 வயது இந்திய வம்சாவளி மாணவர்
#Arrest
#Student
#America
#Indian
Prasu
1 hour ago
அமெரிக்காவில் 22 வயது இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் தீ வைப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மாணவரான மனோஜ் சாய் லெல்லா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள், மனநல பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக புகார் அளித்ததை அடுத்து மனோஜின் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து சென்று கைது செய்துள்ளனர்.
மனோஜ் ஒரு வாழ்விடத்தையோ அல்லது வழிபாட்டுத் தலத்தையோ சேதப்படுத்தும் நோக்கத்துடன் தீ வைப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
(வீடியோ இங்கே )