நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மீறி சாதனை படைத்த இலங்கை சுங்கத்துறை!
#SriLanka
#Revenue
#customs
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
கடந்த ஆண்டில் இலங்கை சுங்கத்துறை சாதனை அளவாக 2,497 பில்லியன் ரூபாய்வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான நிதி அமைச்சினால் சுங்கத்துறைக்கு வழங்கப்பட்ட வருவாய் இலக்கு 2115 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இலக்கு நவம்பர் மாதத்தில் எட்டப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வருவாய் நவம்பர் மாதத்திற்குள் 2115 பில்லியனில் இருந்து 2231 பில்லியனாக திருத்தப்பட்டது என்றும், அந்த இலக்கு தற்போது மீறப்பட்டுள்ளதாகவும், சுங்கத்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுங்கத்துறையில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த உயர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக சுங்கத்துறை ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
