மதுபோதையில் வாகனத்தை செலுத்தினால் கடும் தண்டனை!

#SriLanka
Mayoorikka
5 hours ago
மதுபோதையில் வாகனத்தை செலுத்தினால் கடும் தண்டனை!

மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினால் அது பாரிய குற்றச் செயலாகும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

 பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

 மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினால் போக்குவரத்து விதிமீறல் என்பதற்கு மாறாக பாரிய குற்றச் செயல் என்ற ரீதியில் தண்டனை வழங்கப்படும் வீதி விபத்துக்களுக்கு பிரதான காரணம் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவது தான்.

 எனவே, மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!