ஈபிடிபி செய்த கடத்தல்கள் ஊழல்கள் அம்பலத்துக்கு வரும்! ரஜீவன் எம்.பி

#SriLanka
Mayoorikka
1 hour ago
ஈபிடிபி செய்த கடத்தல்கள் ஊழல்கள் அம்பலத்துக்கு வரும்! ரஜீவன் எம்.பி

ஈழமக்கள் ஜனநாயக கட்சி செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பம், ஊழல் தொடர்பிலும் அம்பலத்துக்கு வரும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.

 சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை (30) வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் ந. திருலிங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

 இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் கலந்து கொண்டு, சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்ததுடன் கருத்துக்களையும் வழங்கினார். 

 வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மொத்தம் 35 பேருக்கான நியமனக் கடிதங்கள் இந்நிகழ்வின் போது வழங்கிவைக்க பட்டன. 

வறுமை ஒழிப்பு, சமூக மேம்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்குடன் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நியமனம் பெற்ற குழுத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கான முழுநாள் கருத்தரங்கு இடம்பெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!