காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் நடிகர் அர்ஜுன் மகளின் திரைப்படம்

#Actor #Actress #TamilCinema #release #valentine #Movie
Prasu
1 hour ago
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் நடிகர் அர்ஜுன் மகளின் திரைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் ஐஸ்வர்யாவை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து சொல்லிவிடவா என்ற படத்தை இயக்கி இருந்தார். 

இதனை தொடர்ந்து, தற்போது 'சீதா பயணம்' என்ற புதிய படத்தை அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 

காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 14ம் திகதி காதலர் தினத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!