சுவிஸ் பேர்ன் கன்றோன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விநாயக மூர்த்தி கந்தசாமி!
நான்கு தசாப்த்தங்களுக்கு மேலாக சுவிசில். தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் எம்மவர்களின் வரலாறு காலத்தால் அளியாத கல்வெட்டாக திகழ்கின்றது.
எமது சிறார்கள் கல்வியிலும் .உயர்பதவிகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள்.புதியதொரு வரலாற்றுச்சாதனைக்கான நேரம் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வருகிறது, ஆம் பேர்ன் கன்றோன் பாராளுமன்ற (Grossrat)தேர்தல் நடைபெறவிருக்கின்றது.
இது வரை பேர்ன் கன்றோன் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு தமிழரின் பிரதி நிதித்துவம் இருக்கவில்லை.
இக்குறையை நிவர்த்தி செய்ய எம்மவருக்கு ஒர் அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.FDP கட்சி சார்பாகா நான் Bern Mittelland தொகுதியில் போட்டியிடுகின்றேன், எம் தமிழ் உறவுகள் தங்களுடைய பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இத்தேர்தல் பற்றிய மேலதிக விவரங்கள் பின்னர் அறியத்தருகிறேன் என சுவிஸ் பேர்ன் கன்றோன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விநாயக மூர்த்தி கந்தசாமி தெரிவித்துள்ளார்.