கடந்த ஆண்டு வெளியான 'ரெட்ட தல' படுதோல்வி
#TamilCinema
#Collection
#Movie
#2025
Prasu
1 hour ago
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வந்த படம் ரெட்ட தல. இப்படத்தில் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
இரட்டை வேடங்களில் அருண் விஜய், திரில்லர் கதைக்களம் என பல விதமான எதிர்பார்ப்புடன் இப்படம் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
இந்த நிலையில், ரெட்ட தல படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 4 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்துள்ளது.
(வீடியோ இங்கே )