இன்றைய ராசிபலன் (05.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
6 months ago
இன்றைய ராசிபலன் (05.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டி ருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர் கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும்.

ரிஷபம்:

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்று வீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலையில் குடும்பப் பெரியவர் களின் ஆலோசனை அவசியம். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் அனுசரித்துச் செல் வது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

மிதுனம்:

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்கள் போக்கிலேயே சென்று விட்டுப்பிடிப் பது நல்லது. வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்துகொள்வார். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கடகம்:

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரி யங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்குவதுடன் அவருடைய ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

சிம்மம்:

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவ னம் தேவை. உங்களுடைய பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக் கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனி வான அணுகுமுறை அவசியம்.

கன்னி:

கன்னிராசி அன்பர்களே பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர் களாலும் நண்பர்களாலும் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

துலாம்:

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாகும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும்.

விருச்சிகம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளி லும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.

தனுசு:

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணைவழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மகரம்:

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிணக் குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான ஆத ரவு கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிரமமான சூழ்நிலையே காணப்படுகிறது.

கும்பம்:

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனு சரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச் னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் ஏற்படுவதற்கில்லை.

மீனம்:

இன்று எதிலும் பொறுமை அவசியம். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டி யிருக்கும். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4