மீண்டும் இன்று ஆரம்பமாகிய உயர்தரப் பரீட்சை!

#SriLanka
Mayoorikka
1 hour ago
மீண்டும் இன்று ஆரம்பமாகிய உயர்தரப் பரீட்சை!

டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை முதல் நடைபெறவுள்ளன. 

 குறித்த பரீட்சைகள் நாளை முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 

 நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதுடன், 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் 32 பிரதேச மத்திய நிலையங்களும் இதற்காகச் செயற்படுத்தப்பட்டுள்ளன. 

 அனர்த்த நிலைமை காரணமாகத் தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு போன்றவற்றைத் தொலைத்த பரீட்சார்த்திகள், தற்காலிக அடையாள ஆவணத்தைச் சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும். 

 முன்னைய கால அட்டவணையில் குறிப்பிடப்பட்ட அதே நேரங்களிலேயே பரீட்சைகள் நடைபெறும்.

 எனினும்,பரீட்சை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!