அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த கத்தார்
#Protest
#America
#Warning
#Iran
#Qatar
Prasu
3 hours ago
ஈரானில் விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி, "ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும்.
பெரும் போர் வெடிக்கும். தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
(வீடியோ இங்கே )