பராசக்தி திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கவிஞர் வைரமுத்து பராசக்தி திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா என செய்தியாளர்கள் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பிய போது, பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன்.1952ம் ஆண்டில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன்.
முன்பே பார்த்து நான் வியந்து, மகிழ்ந்து, உணர்ந்த திரைப்படம். நடிகர் திலகம் என்கிற மாபெரும் கலைஞனும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் வசனகர்த்தாவும் தமிழ்நாட்டிற்கு கொடுத்த குடை என்று சொல்லவேண்டும்.
பராசக்தி 52ல் வெளிவந்தது.53ல் நான் பிறக்கிறேன். நான் வளர வளர பராசக்தி படித்து, கேட்டு வளர்ந்திருக்கிறேன். அந்த பராசக்தியின் உணர்வு இன்னும் என்நெஞ்சில் அப்படியே இருக்கிறது.
தற்போது வந்துள்ள பராசக்தி படத்தை நான் பார்க்கவில்லை. படம் பார்க்காமல் நான் கருத்து சொல்லக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )