இலங்கை மின்சார சபையின் தன்னார்வ ஓய்வுக்கு விண்ணப்பித்த ஊழியர்களின் மனக் குமுறல்!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பின் கீழ் தன்னார்வ ஓய்வுக்கு விண்ணப்பித்த 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தலையிடுமாறு வலியுறுத்தி அதன் ஊழியர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
குறித்த கடிதத்தில், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாங்கள் தன்னார்வ ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு இணையாக தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தையும் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் மறுசீரமைப்பு செயல்முறை நாளுக்கு நாள் தாமதமாகி வருவதால் தாங்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்ட திகதியை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஊழயர்கள் மின்சார சீர்திருத்த செயலகத்தின் இயக்குநர் ஜெனரல் பொறியாளர் புபுது நிரோஷன் ஹடிகல்லகேவும் இது தொடர்பில் தங்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த திகதி அறிவிக்கப்படவில்லை எனவும், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்