நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டம் - நீதிமன்றத்தை நாடிய முன்னாள் எம்.பிகள்!

#SriLanka #Parliament #Pension #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டம் -  நீதிமன்றத்தை நாடிய முன்னாள் எம்.பிகள்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய சட்டமூலத்தை இரத்து செய்யக்கோரி புதிய சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்.பிகள் சிலர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

இந்நிலையில் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு தீர்க்கமான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த எம்.எம். பிரேமசிறி, நவரத்ன பண்டார, நிஷாந்த தீபால் குணசேகர மற்றும் சமன் சிறி ஹேரத் ஆகியோரால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 அதேபோல், 1988 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பியசோம உபாலி மற்றும் 1988 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை பணியாற்றிய உபாலி சரத் டன்ஸ்டன் அமரசிறி ஆகியோரால் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக தமது முழு வாழ்வையும் பொதுச் சேவைக்காக அர்ப்பணித்துள்ளதாகவும், தற்போது ஓய்வூதியத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். 

ஓய்வுபெற்ற உறுப்பினர்களும் சில மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமாரும் தமக்குக் கிடைக்கும் சுமார் 60,000 முதல் 80,000 ரூபா வரையிலான ஓய்வூதியத்தை வைத்தே மருத்துவ மற்றும் அடிப்படைச் செலவுகளைக் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

இந்தத் தொகை தற்போதைய நிலையில் போதுமானதல்ல. எனவே, இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்பதால், இதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மக்களின் அங்கீகாரத்தைப் பெற 'சர்வசன வாக்கெடுப்பு' அவசியம் என அறிவிக்க வேண்டும்” என கோரியுள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!