இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #Weekly-Rasipalan
Prasu
3 hours ago
இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

மேஷம்

இந்த வாரம் மேஷ ராசியினருக்குப் புகழும், கௌரவமும் பெருகும் வாரமாக அமைகிறது. ராசிநாதன் செவ்வாயின் அருளால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். 

குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும், சுற்றமும் நட்பும் உங்கள் ஆலோசனைகளை நாடி வருவர். சமூக நற்பணிகளை முன்னாள் நின்று செய்வீர்கள். ஆன்மீக உணர்வுகள் அதிகரிக்கும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். வங்கி கடன் விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடன் கைவந்து சேரும். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.

செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபட்டு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வது நன்மைகளை இரட்டிப்பாக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்குப் பொருளாதார ரீதியாக இக்காலம் பொற்காலமாக அமையும். சுக்கிரனின் சுப பார்வையால் தடைபட்ட காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். 

கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிப்பதுடன், உறவினர்களிடையே நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். உறவினர் வீட்டு சுப காரியங்களில் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். 

உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவை நன்றாக இருக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும், பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். 

அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது செல்வத்தை அள்ளித் தரும்.

மிதுனம்

புதன் பகவானின் ஆதிக்கத்தில் உள்ள உங்களுக்கு இந்த வாரம் அறிவுத்திறன் மிளிரும் வாரமாகத் திகழ்கிறது. எடுக்கும் முயற்சிகள் யாவும் சாதகமான பலன்களைத் தரும். 

புதிய நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களின் போது விழிப்புணர்வு அவசியம். யாருக்காவது உதவி செய்வதற்கு முன் அது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும் . 

உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன, வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் சீராக இருக்கும். 

கடன் கொடுத்தல் மற்றும் பெறுதல் ஆகியவற்றில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நலம். 

புதன்கிழமை அன்று விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பதும், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவதும் தோஷங்களை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும்.

கடகம்

சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் மனமகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும். 

தாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும், பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உறவு இனிக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், கூட்டுத்தொழில் புரிவோர் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். 

எதிர்பாராத நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். உடல் சோர்வு தலைதூக்கலாம் என்பதால் முறையான உறக்கமும், தியானமும் புத்துணர்ச்சி தரும். 

சந்திரசேகரராகிய சிவபெருமானை வில்வ இலைகளால் பூஜித்து, பால் தானம் செய்வது சிறப்பான யோகங்களைத் தரும்.

சிம்மம்

சூரியனின் ஆதிக்கம் நிறைந்த சிம்ம ராசியினருக்கு இவ்வாாரம் அதிகாரம் மற்றும் செல்வாக்கு மேலோங்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி வந்து சேரும். 

தந்தை வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். நண்பர்களுடன் அதிகமாக நெருங்கி பழகுவதை தவிர்ப்பது அவசியம். பெண் வழி உறவினர்களால் சில நன்மைகள் வந்து சேரும். 

பணியிடத்தில் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும், வருமானம் உயருவதற்கான புதிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வர்த்தகத் துறையினருக்கு இதுவரை இருந்த சிக்கல்கள் விலகும். 

கண் மற்றும் எலும்பு தொடர்பான உபாதைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறவும். ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வதும், தந்தை வழி உறவினர்களிடம் ஆசி பெறுவதும் ஆற்றலை பெருக்கும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் செவ்வனே நிறைவேறும் வாரமாக அமையும். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகன யோகம் கிடைக்கும். 

குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள், பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு நிம்மதி தரும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. 

எதிலும் அவசரம் வேண்டாம். அறிமுகமில்லாத நபர்களிடம் ரகசியங்களைப் பகிர வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்குப் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற ஊதியம் கிட்டும். 

செல்போன் தொடர்புகளில் கவனம் தேவை. நரம்பு சம்பந்தமான சோர்வு ஏற்படலாம் என்பதால் சத்தான உணவுகளை உட்கொள்ளவும். புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலில் துளசி மாலை சமர்ப்பித்து வழிபடுவது காரிய சித்தியைத் தரும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு இக்காலம் எதிலும் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிக்க வேண்டிய வாரமாகும். சுக்கிரனின் ஆசியால் கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கைத் துணையின் உதவியால் பல்வேறு சிரமங்கள் அகலும். மனைவி வழி உறவினர்கள் மூலம் பல நன்மைகள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும் என்பதால் தனித்துச் செயல்படுவது நலம். பொருளாதாரத்தில் சுமாரான முன்னேற்றம் உண்டு. 

திட்டமிட்டு செயல்படவும். சிறுநீரக உபாதைகள் வராமல் தடுக்க அதிக அளவில் நீர் அருந்துவது அவசியம். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுவது சங்கடங்களைத் தீர்த்து மங்கல வாழ்வு அளிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும் வாரமாக இருக்கிறது. தடைப்பட்ட திருமண முயற்சிகள் கைகூடும். உங்களுக்காக செய்வது விட பிறருக்காக செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். 

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெற்றோர்களுடைய விருப்பப்படி நடந்து கொண்டு அவர்களுடைய ஆசிகளை பெறுவீர்கள். 

குடும்ப வாரிசுகளால் சமூக மதிப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியான போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள், புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். 

பூமி மற்றும் வாகன சேர்க்கைக்கான யோகம் உண்டாகும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்கவும். 

கோபத்தைக் குறைப்பது நலம். செவ்வாய்க்கிழமை அன்று கந்த சஷ்டி கவசம் வாசிப்பதும், செந்நிற மலர்களால் முருகனைத் துதிப்பதும் மேன்மைகளைத் தரும். 

தனுசு 

குரு பகவானின் அருளால் தனுசு ராசியினருக்குப் பல நற்பலன்கள் கிட்டும் வாரமாக இது அமைகிறது. ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். 

ஆன்மீக வழிபாடு மூலம் எதிர்பார்த்த பலன்கள் கை வந்து சேரும். தடைப்பட்டிருந்த சுப விசேஷங்கள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், பூர்விகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். 

துணிச்சலாக செயல்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவு நீடிக்கும், முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். 

நீண்டகால முதலீடுகளில் திட்டமிட்டு ஈடுபடுவதால் பல நன்மைகள் வந்து சேரும். பாதங்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் நீண்ட தூர நடையைத் தவிர்க்கவும். 

வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சூட்டி, கடலை தானம் செய்வது மிகச்சிறந்த பரிகாரமாகும். 

மகரம் 

மகர ராசியினருக்கு இவ்வாாரம் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சனியின் ஆதிக்கம் இருப்பதால் எந்த ஒரு செயலையும் நிதானமாகச் செய்வதுதான் வெற்றி தரும். 

மௌனம் நல்லது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும், உறவினர்களிடையே உங்கள் பேச்சுக்கு மதிப்புக் கூடும். எந்த ஒரு விஷயத்திற்கும் சரியான நேரத்திற்கு சென்று விடுவது முக்கியம். 

திட்டமிட்டு செயல்படவும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி லாபம் அதிகரிக்கும், பழைய பாக்கிகள் வசூலாகும். தேவஸ்தர்களுக்கு புதிய மற்றும் நல்ல வாய்ப்புகள் கைவந்து சேரும். 

எதிர்பாராத வாய்ப்புகளை பயன்படுத்தி நன்மை பெறலாம். மூட்டு வலி, வாதம் தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். முறையான உடற்பயிற்சி தேவை. சனீஸ்வர பகவானுக்கு எள் தீபமேற்றி, காக்கைக்கு அன்னமிடுவது கர்ம வினைகளைக் குறைத்து நலம் பயக்கும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் மனவலிமையும் புதிய நம்பிக்கையும் பிறக்கும் வாரமாக அமைகிறது. புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்து, மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

நண்பர்களின் உதவியால் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள், வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. குடும்ப உறவினர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையின் மூலம் பல சிக்கல்கள் அகலும். 

உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பரஸ்பர புரிதல் மேம்படும். 

சுவாச சம்பந்தமான பாதிப்புகள் வராமல் காக்கப் பிராணாயாமம் செய்வது நலம். சனிக்கிழமை அன்று அனுமன் சாலிசா பாராயணம் செய்வதும், ராம நாமத்தை ஜெபிப்பதும் இன்னல்களை நீக்கி வெற்றி தரும். 

மீனம் 

மீன ராசியினருக்கு இந்த வாரம் தெய்வீக அருளும் மனநிறைவும் கொண்ட வாரமாக அமையும். கோவில் வழிபாடு, புண்ணிய தீர்த்த நீராடல் உண்டு. 

புண்ணியக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும், ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. 

வியாபாரத்தில் எதிர்பாராத லாபமும் புதிய வாடிக்கையாளர்களின் வரவும் மகிழ்ச்சி தரும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியாக உதவி செய்யும் தொடர்புகள் தேடி வரும்.

தூக்கமின்மை காரணமாகச் சோர்வு ஏற்படலாம். போதிய ஓய்வு அவசியம். குரு பகவானுக்கு நெய் தீபமேற்றி ஏழைகளுக்கு ஜாங்கிரி, மஞ்சள் நிற உடை தானம் செய்வது நன்மைகளைப் பெருக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!