தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) துணை இயக்குநருக்கு கட்டாய விடுப்பு!
#SriLanka
#education
#ADDA
#ADDAADS
#ADDAFLY
Thamilini
3 hours ago
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில தொகுதி தொடர்பாக தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) துணை இயக்குநர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய கல்வி நிறுவனத்தின் மேலும் இரண்டு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில தொகுதி தொடர்பான விசாரணை முடியும் வரை தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்