100 கோடி வசூல் சாதனை படைத்த சிவகார்த்திகேயனின் பராசக்தி
#TamilCinema
#Collection
#Movie
#Sivakarthikeyan
Prasu
2 months ago
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 வெளியானது. படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதராசி, அமரன், பராசக்தி என தொடர்ந்து 3 படங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
(வீடியோ இங்கே )