எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான அரச கொள்வனவு ஆரம்பம்!
#SriLanka
#rice
#government
Soruban
2 hours ago
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார்.
வன்னி உட்பட வடக்கு கிழக்கில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த கோரிக்கைக்குப் பதில் வழங்கும் போதே, அமைச்சர் கே.டீ.லால்காந்த இதனைக் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )