அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்!
அரசு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக 07 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (22) காலை 8.00 மணி முதல் ஏழு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தை நிறுத்தி வைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக நேற்று மாலை சுகாதார துணை அமைச்சருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் துணை இயக்குநராக கடமைகளை ஆற்றும் நபர் செய்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் நெறிமுறையற்ற செயல்கள் குறித்து ஒரு வார காலத்திற்குள், சங்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்குத் தேவையான சூழல் உருவாக்கப்படும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே தொழிற்சங்க நடவடிக்கையை 07 நாட்களுக்கு கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்