CCTV கண்காணிப்புக்கு ஏற்பாடு - வேலணை பிரதேச சபை விசேட நடவடிக்கை!
சட்டவிரோத செயற்பாடுகள் கலாச்சார சீரழிவுகளை கட்டுப்படுத்த வேலணையில் நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிசிரிவி கண்காணிப்பு கெமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய சபை அமர்வில் தவிசாளர் அசோக்குமாரால் அறிவிக்கப்பட்டது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்படுவதாக தவிசாளர் அறிவித்திருந்தார்.
அண்மைக் காலமாக வேலணைப் பிரதேசத்தில் சமூகவிரோத செயற்பாடுகளும், சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து வருவதாக பலதரப்பட்டவர்களிடமிருந்தும் சுட்டிக்காட்டப்பட்டுவரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை எடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய அமர்வின் போது சபையில் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படும், அத்தியாவசிய பிரச்சினைகள்,தேவைப்பாடுகள் குறிப்பாக குடிநீர், சுகாதாரம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய இடங்களில் CCTV கண்காணிபுக்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்