யாழ். 'அம்மாச்சி' உணவகத்தில் குண்டு தோசை சாப்பிட்ட பிரித்தானிய தூதுவர்..
யாழ்ப்பாணத்தில் பெண்கள் நடத்தும் 'அம்மாச்சி' உணவகத்திற்கு இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
டித்வா சூறாவளிக்குப் பின் வட மாகாணத்திற்கு அவர் நேற்றுமுன்தினம் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போதே பெண்கள் நடத்தும் 'அம்மாச்சி' உணவகத்தில் பாரம்பரிய யாழ்ப்பாண காலை உணவோடு அவர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இதன்போது தோசையும் சம்பலும் உண்ணும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் பயணத்தின்போது தொண்டமானாறு செல்வ சந்நிதி கோவிலுக்கும் எளிமையாக விஜயம் செய்துள்ளார்.
இதேவேளை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick), யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றையதினம் காலை அரச அதிபர் அலுவலகத்தில் சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், டித்வா புயல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிதியினை அரசாங்கத்திற்கு வழங்கி செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் , டித்வா புயலுக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவதானித்தவகையில் சிறப்பான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்து, மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார முன்னேற்ற நிலைமைகள், காங்கேசன்துறை முதலீட்டு வலயம், முதலீட்டு வாய்ப்புக்கள் போன்ற விடயங்களை அரச அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்