புத்தர் சிலை விவகாரம் - திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவை கோரும் மேன்முறையீட்டு நீதிமன்றம்!
#SriLanka
#Trincomalee
#Court Order
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக ஜனவரி 19 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் எழுத்துப்பூர்வ உத்தரவு மற்றும் ஆடியோ பதிவை தாமதமின்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது.
தங்கள் தடுப்புக் காவலை எதிர்த்து வணக்கத்திற்குரிய கஸ்ஸப்ப தேரர் மற்றும் மற்றொரு பிக்கு தாக்கல் செய்த ரிட் மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனவரி 19 ஆம் திகதி , திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைப்பதன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பிக்குகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்