காணாமல் போன ஆட்கள் பற்றி சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான விசாரணை|
#SriLanka
#Complaint
#Investigation
#Missing
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்யும் இந்த ஆண்டுக்கான விசாரணை மேற்கொள்ளும் பணி கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது.
நேற்றைய தினம் வவுனியாவில் விசாரணைகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான செயலமர்வு நீதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிலையில் இன்று விசாரணைகளை மேற்கொள்ளும் பணி கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.
காணாமல் போன ஆட்கள் பற்றிய கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற 112முறைப்பாடுகள் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஸ் கட்டுலந்த தலைமையில் மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்