அமெரிக்க ஜனாதிபதியின் மோசமான விமர்சனங்கள் - இங்கிலாந்து பிரதமர் கண்டனம்
#PrimeMinister
#America
#England
#Trump
Prasu
1 hour ago
ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய ராணுவ வீரர்கள் பணியாற்றிய விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோசமான விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், ட்ரம்ப் தன்னுடைய கருத்துக்களுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
9/11க்குப் பிறகு கூட்டணியின் பரஸ்பர பாதுகாப்பு விதியைப் பயன்படுத்திய ஒரே உறுப்பினராக இருந்தபோதிலும், ட்ரம்ப் தவறான கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோதலின் போது நேட்டோ நட்புப் படைகள் “முன்னணியில் இருந்து சற்று விலகி இருந்தன” என்று ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )