இந்தியா மீதான வரி விதிப்பை 25 சதவீதம் குறைக்கும் அமெரிக்கா
#India
#America
#Oil
#Trump
Prasu
1 hour ago
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
இந்த நிலையில் அமெரிக்க நிதித்துறை மந்திரி ஸ்காட் பெசென்ட், ரஷிய எண்ணெயை வாங்கியதற்காக நாங்கள் இந்தியாவின் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தோம்.
தற்போது ரஷிய எண்ணெயை வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன.
இதனால். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தற்போதைய 50 சதவீத வரி, 25 சதவீதமாக குறைக்கப்படலாம் என்று ஸ்காட் பெசென்ட் சூசகமாக தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )